- Edition: 1
- Year: 2011
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாசல் படைப்பகம்
ஆகாயத்தில் எறிந்த கல்
இந்திய மரபில் உருவாக்கப்பட்டுள்ள புனிதங்கள் என்னும் மாயத்திரையை விலக்கி உண்மையைக் கண்டு சொல்லத் துணியும் ஒரு நெடும்பாதையில் ஆதவன் தீட்சண்யாவின் எழுத்துக்களும் இருக்கின்றன.
சாதியம் உருவாக்கியுள்ள கோபுரங்களைக் குடைசாய்ப்பதையும், உருவாக்கியுள்ள கற்பிதங்களை உடைப்பதையும் - ஆய்வுகளை சொல் முறையில் இயைந்து பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பவரை ஆழங்களுக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் பொருந்தியவை.
களப்பிரர்கள் யார் என்று பேசும்போதும், முக்கியமாக எமர்ஜென்சி காலத்தைப் பற்றிப் பேசும்போதும், பொதுவாக பேசிவிட்டுச் செல்வது என்பதைத் தவிர்த்து அறிவின் வெளிச்சத்தில் பகுத்தறிவின் பரப்பைக் காண்பிக்கும் தர்க்கங்களை முன்வைப்பவை இந்த எழுத்துக்கள்.
ஆதவனின் எழுத்துக்களை வாசிக்கும் பொழுது ஏற்கனவே புரிந்து வைத்திருக்கும் ஒவ்வொன்றும் தனக்குள் கலைக்கப்பட்டு சிதறிவிடுவதையும், பின்பு அவை மெல்ல ஒரு புதிய முறையில் அடுக்கப்படுவதையும் ஒருவர் உணரமுடியும். அதே நேரம், புதிய கேள்விகள் சிலவற்றையும் கண்டடைவார்.
இவைபோன்ற எழுத்துக்கள்தான் பண்பாட்டையும், வரலாற்றையும் விமர்சனப்பூர்வமாக கண்டுகொள்ளத் தூண்டுபவை.
Book Details | |
Book Title | ஆகாயத்தில் எறிந்த கல் (Aagaayathil Erintha Kal) |
Author | ஆதவன் தீட்சண்யா (Aadhavan Dheetchanya) |
Publisher | வாசல் (Vaasal) |
Pages | 96 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |